Published : 29 Apr 2016 11:04 AM
Last Updated : 29 Apr 2016 11:04 AM

மதுவைக் கைவிடுங்கள்!

குடிக்கு அடிமையாகிவிடுவதால் கை கால் நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி யின்மை, வயிற்றுப்புண், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதயத் தசைகள் பழுதடைதல் என்று உடலின் எல்லா உறுப்புகளையும் குடி கெடுத்துவிடும். சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களது தேர்தல் வாக்குறுதி யாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அறிவித்திருக்கின்றன.

புதிய ஆட்சி வந்து மதுவை ஒழித்த பிறகுதான் அப்பழக்கத்தைக் கைவிடுவோம் என்றில் லாமல், தொழிலாளர் தினம் மே 1 முதல் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட சபதம் ஏற்க வேண்டும். அரசின் மதுவிலக்கு அறிவிப்பு வரும்போது, வரவேற்க அதுவே உதவும்.

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x