Published : 18 Apr 2016 12:09 PM
Last Updated : 18 Apr 2016 12:09 PM
மேற்கு வங்கத்தில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக கடவுளை வம்புக்கு இழுத்திருக்கும் செய்தியைப் படித்தேன். மனிதனைப் போன்ற தோற்றத்தில் கடவுள் இருப்பதாக நாம் தீவிரமாய் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில், கடவுள் என்பது முன்னோர்கள் நம் முன்வைத்த அழகான கருத்தாக்கம்.
அக்கருத்தாக்கத்தின் வழி இயற்கையையும், மனித வாழ்வையும் புரிந்துகொள்வதற்கான செய்திகளே சொல்லப்பட்டிருக்கின்றன. வழிபாடு எனும் சொல்லுக்கே வழிநிற்றல் என்றுதான் பொருள். அவ்வகையில் இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்வை நினைவூட்டவானதே சமயமும், சடங்குகளும். மனிதனைத் தவிர பிற உயிர்கள் இயற்கைக்குச் சிறிதும் முரண்படா வாழ்வை வாழ்கின்றன.
அவ்வகையில் அவற்றுக்குக் கடவுள் எனும் கருத்தாக்கம் அவசியமில்லை. ஆறாவது அறிவு பெற்ற நாமோ இயற்கையிலிருந்து நம்மை முழுக்கத் துண்டித்து, செயற்கையான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆக, அதைப் புரிந்துகொள்வதற்குக் கடவுள் குறியீடு மிக அவசியம். ஆனால், நாமோ புத்திசாலித்தனமாக மனிதப் பிழைகளுக்குக் கடவுளைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறோம்.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT