Published : 01 Apr 2016 10:46 AM
Last Updated : 01 Apr 2016 10:46 AM
மக்கள் நலக் கூட்டணி, இப்போது கேப்டன் கூட்டணியாக மாறியுள்ளது.1970-க்குப் பின்பு தொடர்ந்து சினிமாக்கார்களின் பிடியிலிருக்கும் ஆட்சியை விடுவித்து, மற்றொரு சினிமாக்காரரிடம் ஒப்படைப்பதுதான் இக்கூட்டணிக்கு வாக்களித்தால் நேரப்போவது என்பதே உண்மை. மந கூட்டணிக்கு சுமார் 15% பேர் வாக்களிப்பார்கள். இரு திராவிடக் கட்சிகளும் ஏறத்தாழ சம பலமுடைய வாக்கு வங்கிகளைக் கொண்டிருக்கின்றன.
எனவேதான் முந்தைய தேர்தல்களில், ஒன்றையொன்று முந்த கூட்டணித் தத்துவத்தைக் கையில் எடுத்துக்கொண்டன. ஆனால், இம்முறை ஒன்றையொன்று முந்துவதற்குக் கையில் எடுத்திருக் கும் ஆயுதம், வாக்குகளைச் சிதறடிக்கும் தத்துவமாக உள்ளது. எப்படிப் பார்த்தாலும் கேப்டன் கூட்டணி ஆட்சியைப் பிடிப்பதென்பது சந்தேகமே. எனவே, இக்கூட்டணி மாற்று அணியாக இருக்க வாய்ப்பில்லை என்பதையே ‘மாற்றம்: அழிவில் இருந்து பேரழிவுக்கு' கட்டுரையும் உணர்த்துகிறது.
- எஸ். தினகரராஜன், திருநகர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT