Published : 22 Apr 2016 11:24 AM
Last Updated : 22 Apr 2016 11:24 AM
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதில், நூலகங்களின் பங்கு அளப்பரியது. நூலகங்கள் ஒரு இனத்தின் பண்பாட்டுச் சின்னங்கள். ஒரு சமூகம் அடைந்துள்ள நாகரிகத்தின் அளவுகோல்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் அவை போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
உலகத் தரமான ஒரு நூலகத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செயல்படவிடாமல் தடுப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து நடுநிலைத் தன்மையுடன் தலையங்கம் எழுதிய ‘தி இந்து’வுக்கு நன்றி. இனியாவது, நூலகங்களில் பணியிடங்களை நிரப்பவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
- கி.கேசவன், செங்கப்படை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT