Published : 22 Apr 2016 11:22 AM
Last Updated : 22 Apr 2016 11:22 AM

வசந்திதேவி வரட்டும்

கூட்டணி ஆட்சியை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முன்னாள் துணைவேந்தரும், அடித்தட்டு மக்களுக்குக் கல்வி வேண்டும் என்று தொடர்ந்து வலியு றுத்தும் போராளியுமான வசந்தி தேவி போன்றவர்களை வேட்பாளர்களாக அறிமுகம் செய்து, தேர்தல் களத்தில் தாங்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்பதைப் பறைசாற்றியுள்ளனர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை மிகுந்த அரசியல் தலைவரான தொல். திருமாவளவன் தலைமையில், தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியுள்ளனர் என்றால் அது மிகையில்லை.

- தி.நெடுஞ்செழியன், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x