Published : 11 Apr 2016 11:36 AM
Last Updated : 11 Apr 2016 11:36 AM
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நூறு சதவிகித வாக்கு என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். இதன் முன்னோடியாக தபால் வாக்குகள், அண்டை மாநிலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் முன் ஒப்புதல் என்று அனைவரும் வாக்களிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. நல்ல விஷயம்தான். அதேபோல மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், சிறைக் கைதிகள் வாக்களிக்க வகை செய்தால் நலம். வெளிநாட்டு வாழ் தமிழர்களும் எதிர்வரும் காலங்களில் இணையம் மூலம் வாக்களிக்க வகை செய்தால் நூறு சதவிகித இலக்கை அடையலாம்.
அதேநேரத்தில், 49ஓ என்பது பொருத்தமான வேட்பாளர் இல்லாத சமயம் வாக்களிக்கும் கடமையில் தவறாமல் இருக்க ஒரு வாய்ப்புதான் என்பதை உணர்த்தியும், வேட்பாளர்களுக்கே வாக்களிப்பு என்பதுதான் உண்மையான நூறு சதவிகித வாக்களிப்பு என்பதையும் ஆணையம் முன்னிறுத்த வேண்டும்.
- எம்.விக்னேஷ், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT