Published : 09 Apr 2016 11:45 AM
Last Updated : 09 Apr 2016 11:45 AM
தமிழகத்தில் அரசியல் விமர்சனங்கள் தனிநபர் விமர்சனங்களாகத் தொடர்வது கவலைக்குரியது. ‘அவர் வரலாற்றில் இருக்கிறார்’ கட்டுரை படித்தேன். கருணாநிதி எதிரியை விமர்சிப்பதில்கூட ஒரு கண்ணியம் இருக்கும். அவரது பேச்சை எதிரிகள்கூட ரசித்துக் கேட்பார்கள். ஆனால், அவர் வழிவந்த வைகோவின் பேச்சை கூட்டணிக் கட்சித் தலைவர்களாலேயே சகித்துக்கொள்ள முடிவதில்லை. இதுதான் அண்ணாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட கடமை, கண்ணியம், கட்டுப்பாடா?
- கோபிநாத், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.
சிந்தனை செய் மனமே
தகுதியுடைய வேட்பாளர்கள் நமக்கு வேண்டுமென்றால், நாம் முதலில் தகுதியுடைய வாக்காளர்களாக மாற வேண்டும் என்கிற கருத்தை ‘வாக்காளருக்குத் தகுதி வேண்டாமா?’ கட்டுரை நன்கு வலியுறுத்தியது. ஜனநாயக அமைப்பில் நம் எதிர்கால வாழ்வை வரையறுக்கும் உரிமை நம்மிடமே வழங்கப்பட்டுள்ளது. அந்த வாக்குரிமையைப் பயன்படுத்தி, தவறான முடிவின் அடிப்படையில் மோசமான வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டால், அதனால் உருவாகும் தீய விளைவுகளை நாம்தான் ஐந்தாண்டுகள் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும். நம் கையில் இருக்கும் வாக்குச் சீட்டுதான் நம் வாழ்க்கை விதியை நிர்ணயிக்கப்போகும் துருப்புச் சீட்டு என்பதை வாக்காளர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்!
- அ.கற்பூர பூபதி, சின்னமனூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT