Published : 26 Apr 2016 12:12 PM
Last Updated : 26 Apr 2016 12:12 PM

உணருமா அரசு?

தொழிலாளர் விரோதப்போக்கு ஆபத்தில் முடியும் என்ற தலையங்கம் நூற்றுக்கு நூறு உண்மை. தொழிலாளர் வைப்பு நிதியை எடுப்பதற்குத் தடை விதிப்பது, அந்த நிதியை எடுப்பதற்கு வரி போன்ற பட்டவர்த்தனமான தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அரசின் கருணை எந்தப் பக்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொழில் நடத்த நாட்டில் நல்ல சூழலை உருவாக்குவது அவசியமென்றாலும், அதற்காக தொழிலாளர் நலன்களைப் பலி கொடுக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். நாட்டின் வளர்ச்சி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கைகளிலேயே உள்ளது என்பதை உணர்ந்து அரசு தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

- ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x