Published : 31 Mar 2016 11:42 AM
Last Updated : 31 Mar 2016 11:42 AM

வாரிசு அரசியல்!

நமது நாட்டின் அவலநிலையை ‘ஜனநாயகத்திலுமா மன்னராட்சி’ கட்டுரை பிரதிபலிக்கிறது. இதற்கு நமது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உள்ள குறைபாடுகளே காரணம். ஒருநபர் தனது ஆயுள் காலத்தில் பத்து ஆண்டுகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை வகிக்க வேண்டும். அது உள்ளாட்சி, கூட்டுறவு, சட்டமன்றம், நாடாளுமன்றம் அனைத்துக்கும் பொருந்தும் என்று சட்டம் திருத்தப்பட வேண்டும். ஒரு அமைச்சரவையில் ஒரே குடும்பத்தை பல பேர் பங்கேற்பதைத் தடை செய்யவேண்டும். இது போன்ற வழி முறைகளை பின்பற்றினால் மட்டுமே மலரும் மக்களாட்சி.

- ராஜகோபாலன்.ஜே, நெய்வேலி.



இந்திய அரசியலில் மிகப்பெரிய நோயாக வளர்ந்து ஜனநாயகத்தின் வேர்களையே அறுத்தெறியும் அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை வாரிசு அரசியல் உருவாக்கி இருக்கிறது. இதை உணர்த்தும் விதத்தில் அமைந்திருந்தது ‘ஜனநாயகத்திலுமா மன்னராட்சி?' கட்டுரை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கும் இங்குமாக மெல்ல முகம் காட்டிய வாரிசு அரசியல் இன்று இல்லாத இடமே இல்லை.

- அ. கற்பூர பூபதி, சின்னமனூர் (தேனி மாவட்டம்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x