Published : 15 Mar 2016 10:50 AM
Last Updated : 15 Mar 2016 10:50 AM
வங்கிக் கடனை அடைக்காமல், ஊதியமளிக்காமல், சட்டத்தை மதிக்காமல், அரசியல்வாதிகளின் தயவுடன் சமூகத்தில் அந்தஸ்துடன் வலம்வந்த தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டது, பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிதி அதிகாரி மோகன் தாஸ் பாய், விஜய் மல்லையாவின் கடன் குறித்து வாதிடும் கட்சிகள், ஏர்-இந்தியாவின் இழப்பீட்டை பற்றி மௌனம் சாதிப்பதைக் குறித்து கேள்வியெழுப்பி உள்ளார்.
அவரது கேள்வி நியாயமானதே. ஏனெனில், கிங் ஃபிஷெரை ஒப்பிடுகையில் ஏர்-இந்தியாவின் இழப்பீடு அதிகம். மேலும் இது மக்களின் வரிப்பணம். தனிநபர் மற்றும் தனியார் நிறுவனம் செய்யும் ஊழல்களை ஊதித்தள்ளும் ஊடகங்கள், அரசுத்துறை இழப்பீடுகளைக் கண்டு கொள்வதில்லை. ஆக, ஏர்-இந்தியாவின் ஊழல் மற்றும் நஷ்டத்துக்கு யார் பதிலளிப்பது?
- கி. ரெங்கராஜன், திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT