Published : 28 Mar 2016 11:38 AM
Last Updated : 28 Mar 2016 11:38 AM

அரசு நூலகங்களின் பரிதாப நிலை

‘தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளியைப் போல இருக்கிறது அரசு நூலகத் துறை: முன்னாள் நீதிபதி கே.சந்துரு ஆதங்கம்’ என்ற தலைப்பிலான செய்தியைப் படித்தேன். நூல்களைப் பணம் கொடுத்து வாங்கிப் படிக்க வசதியில்லாத கிராமப்புற ஏழை மக்கள் புதிய நூல்களை வாசிக்கச் செல்லும் ஒரே இடம் உள்ளூர் கிளை நூலகங்கள்தான். ஆனால், கிளை நூலகங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல், நூலகர்கள் இல்லாமல், புதிய நூல்கள் வாங்காமல், அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும், போதிய இடமும் இல்லாமல் சீர்கெட்டுக்கிடக்கின்றன என்பது கசப்பான உண்மை.

பொது நூலகத் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி முடிய கொண்டாடப்படும் ‘தேசிய நூலக வார விழா’வும் 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவுக்கே முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கி வந்த தமிழக நூலகத் துறையை மீண்டும் செதுக்கிச் செம்மைப்படுத்திட வேண்டும்!

- அ.கற்பூர பூபதி, சின்னமனூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x