Published : 11 Mar 2016 10:50 AM
Last Updated : 11 Mar 2016 10:50 AM
தமிழகத்தில் நடைபெற்றுவரும் மணல் கொள்ளை குறித்த, ‘கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்’ என்ற தலையங்கம் மிக அருமை. பிரச்சினையையும், அதற்குக் காரணமானவர்களையும் புரிந்து கொண்டால் அதற்கேற்ப மக்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள்.
- ராமசுதாகரன், திருக்கோவிலூர். ‘உங்கள் குரல்’ வழியாக.
தவறான கலாச்சாரம்
‘ஜெயலலிதாவாதல்’ கட்டுரையைப் படித்தேன். இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்தான் தனிநபர் துதி, தனி நபர் சர்வாதிகாரம், குறுகிய வட்டத்தைக் கொண்ட ஆட்சி அதிகார மையம் போன்றவை உருவாகின. அதைத் தொடர்ந்து கருணாநிதி, ஜெயலலிதா என்று விரிந்து, இன்றைக்கு விஜயகாந்த், அன்புமணி வரை அந்தக் கலாச்சாரம் பரவிவிட்டது.
- மலர்மணாளன், பள்ளத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT