Published : 31 Mar 2016 11:48 AM
Last Updated : 31 Mar 2016 11:48 AM

ஆனந்தரங்கப்பிள்ளையின் தமிழ்!

கடந்த சனிக்கிழமை ‘நூல்வெளி’ பகுதியில் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு பற்றிய பதிவைக் கண்டேன். பீரங்கிக் குண்டுகளைப் பற்றி அவர் எழுதிய இந்த பத்தி அவருடைய எழுத்து நடைக்கு ஒரு சோறு பதம்: “மற்றபடி அவன் (இங்கிலீஷ்காரன்) போட்ட தீக்குடுக்கைகள் எல்லாம் நாற்பதுக்கும் உண்டு. அது இப்படி சகல ஜனங்களும் அவஸ்தைப்பட்டார்கள்.

இந்த தீக்குடுக்கை 1-க்கு சிறிது நூற்றைம்பது ராத்தல் முதல் இருநூத்தி பத்து, பதினைந்து மட்டுக்குமிருக்கிறது. இது வரும்போது ஒரு சோதி போல புறப்படுகிற வேடிக்கையும், அப்பாலே மெள்ள அசைந்து அசைந்து கொண்டு அப்பாலே விழுந்தவுடனே வெடிக்கிற வேடிக்கையும், பார்க்கிறதற்கு ஒரு வேடிக்கையாகத்தானே இருந்தது. இத்தனை தீக்குடுக்கை விழுந்தும் ஒரு மனுஷருக்குச் சேதமில்லை. ஒருத்தருக்கும் காயம் பட்டதுமில்லை.”

- உதயா, திருவாரூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x