Published : 24 Mar 2016 12:07 PM
Last Updated : 24 Mar 2016 12:07 PM
அறிவியல் வளர்ச்சி, அதிவேக தனியார் பங்களிப்பையும் தாண்டி அஞ்சலகங்கள் இன்னும் உயிர்ப்புடன் செயல்பட்டுக்கொண்டிருப்பது சிறுசேமிப்பு போன்ற திட்டங்களால்தான். அனைத்து அஞ்சலகங்களிலும் பிபிஎப், கிஸான் விகாஸ் போன்ற திட்டங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்குக் காரணம், அவை தரும் கணிசமான வட்டி வீதம் என்றால் அது மிகையல்ல.
இந்த நிலையில், மத்திய அரசு அதற்கான வட்டி வீதத்தை 0.5% அளவுக்குக் குறைத்திருப்பது, மக்களுக்கு அஞ்சலகத்தின் மேல் உள்ள ஈர்ப்பைக் குறைக்கும். சாதாரண, நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் அதிகம் பயன்பெறும் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கிவரும் வட்டி வீதத்தைக் குறைக்காமல் சிறுசேமிப்பை ஊக்குவிப்பது அரசின் முக்கியக் கடமையாகும்.
- சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT