Published : 01 Mar 2016 10:29 AM
Last Updated : 01 Mar 2016 10:29 AM
ராணிப்பேட்டை ரங்கனின் ‘அது அந்தக் காலம்’ கட்டுரை அண்ணா, கலைஞர் ஆகியோரின் பேச்சையும் அவர்களைப் போல் கரகரக் குரலில் பேசிய கழகக் கண்மணிகளின் பேச்சையும் கேட்ட அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டது. ‘அண்ணா வருகிறார், வருகிறார், வந்துகொண்டே இருக்கிறார்; வருகின்ற வழி எல்லாம் உங்களைப் போல் தொண்டர்கள் அவரை வழிமறித்து நிறுத்திப் பேசச் சொல்வதால், தட்ட முடியாமல் பேசி வருகின்ற காரணத்தால் தாமதமாகிறது, இதோ வந்துவிட்டார்' என்ற பேச்சையெல்லாம் கேட்டது அப்படியே காதுக்குள் ஒலிக்கிறது.
‘கூலி உயர்வு கேட்டான் அத்தான்; குண்டடி பட்டுச் செத்தான்' போன்ற கழகத்தின் வாசகங்களும் நினைவில் நிழலாடுகின்றன. இன்று தொலைக்காட்சிகளில் பேட்டி தருகிறவர்கள், ‘எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், எங்கள் போராட்டம் தொடரும்' என்று தெள்ளத் தெளிவாகத் தமிழில் பேசுகிறார்கள் என்றால், அதற்கு திராவிட முன்னேற்றக் கழகமே முன்னோடி.
- அ. ஜெயினுலாப்தீன், சென்னை.
நடுப் பக்கத்தில் வெளியான ராணிப்பேட்டை ரங்கனின் கட்டுரை அருமை. 50 ஆண்டுகால அரசியலை இளைஞர்களுக்கு தெளிவாகப் புரியும் வகையில் மெல்லிய நகைச்சுவையுடன் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.
- முருகன், கன்னியாகுமரி. ‘உங்கள் குரல்’ வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT