Published : 22 Mar 2016 11:03 AM
Last Updated : 22 Mar 2016 11:03 AM

கண்டிப்பாக நம்பலாம்!

‘மல்லையாவிடம் இருந்து பைசா பாக்கியில்லாமல் வசூல்: ஜேட்லி’ - செய்தியைப் படித்தேன். கண்டிப்பாக அவர்கள் வசூல் செய்துவிடுவார்கள் என்று நம்பலாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டுவருவோம் என்றுகூறி, சொன்னதைப் போலவே அத்தனை கோடி பணத்தையும் கொண்டுவந்து மக்களுக்குக் கொடுத்தவர்கள்தானே அவர்கள். நம்புவோம்.

- மெய்கண்டான், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.



இலவசம் யார் பணம்?

மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, ‘இலவசங்களில் மத்திய அரசின் பங்கு 91 சதவீதம்’ என்று மத்திய அமைச்சர் பாஸ்வான் அதிமுக-வுக்குச் சுட்டிக்காட்டிய செய்தியைப் பார்த்தேன். மத்திய அரசோ, மாநில அரசோ… எதுவானாலும் மக்களின் பணத்தில்தானே இலவசங் களையும் மானியங்களையும் கொடுக்கின்றன? என்னமோ தங்கள் வீட்டுக் காசை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுப்பதுபோல, ஏன் இவர்கள் பேசுகிறார்கள்?

- முகம்மது, ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x