Published : 04 Mar 2016 11:16 AM
Last Updated : 04 Mar 2016 11:16 AM
நீதிக் கட்சியில் வெற்றி பெற்ற சுப்பராயன் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சைகளின் ஆதரவோடு முதல்வர் ஆனார் என்று ஆர்.முத்துக்குமார் எழுதியிருந்தார். 1926 நவம்பர் தேர்த லில் காங்கிரஸுக்கு ஆதரவான சுயராஜ்யக் கட்சி 41 இடங்களிலும், நீதிக் கட்சி 21 இடங்களிலும், சுப்பராயன் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி (சுயேச்சை) 36 இடங்களிலும் வென்றது. சுயராஜ்யக் கட்சி அமைச்சரவை அமைக்க அவகாசம் கேட்டதால், சுயேச்சைகளின் தலைவரான சுப்பராயனை அமைச்சரவை அமைக்க கவர்னர் அழைப்புவிடுத்தார். இப்படித்தான் சுப்பராயன் முதல்வரானார். அவர் கட்சி மாறி முதல்வராகவில்லை.
- புலவர் செ.இராசு, ஈரோடு.
இலவச பஸ் பாஸ்!
சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் தாமதமாக வழங்கப்பட்ட திட்டம் என்றாலும், நல்ல திட்டம். ஆனால், மாதத்துக்கு பத்து கூப்பன் கள் என்பது மிகமிகக் குறைவான எண்ணிக்கை. பத்து கூப்பனுக்குப் பதிலாக இருபது கூப்பன்கள் தரலாம். அல்லது பத்து கூப்பன்களில் ஒவ்வொரு கூப்பனுக்கும் ஒரு நாள் முழுக்க எந்த பேருந்திலும் (ஏ-.சி. பஸ் தவிர) பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். அடுத்து, 60 வயது முதியவருக்குத் துணையாக அவர் மனைவியும் பயணம் செய்யும் வகையில், மூத்த பெண்களுக்கான வயது வரம்பை 55 ஆகக் குறைக்கலாம். அரசு ஆவன செய்யுமா?
- அ. ஜெயினுலாப்தீன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT