Published : 26 Mar 2016 11:09 AM
Last Updated : 26 Mar 2016 11:09 AM
‘என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?’ பகுதியில் மதுவால் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளைப் படித்தேன். இதைவிட அப்பட்டமாக மதுவின் கொடுமையை வெளிப்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை. வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதில் உள்ள பெண்கள் வாழ்க்கையை இழந்து விட்டு நிற்பதைப் பார்க்கும்போது மதுவின் கொடுமையும், அது இன்றைய சமூகத்தில் செய்துள்ள பாதகங்களையும் உணர முடிகிறது.
மதுவைக் கொண்டுவந்தவர் வளர்த்தவர் என்று அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதைவிட, இந்தத் தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு மதுவை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டால் அது நிச்சயம் வாக்குப்பதிவின் போது எதிரொலிக்கும். மதுவிலக்கைக் கொண்டு வருபவர்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க ஆவன செய்யுங்கள், ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை வீணாக்கிவிடக்கூடாது.
ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
மதுவிலக்கு அமல் செய்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் எனக் கூறிக்கொண்டிருப்பது அபத்தம். டாஸ்மாக்கின் நேரத்தை குறைப்பது, நகரில் இருக்கும் கடைகளை அகற்றுவது, விடுமுறை நாட்களை அதிகரிப்பது, மதுபானத் தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி மறுப்பது போன்றவற்றின் மூலம் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தலாம். அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு மது வாங்கிக் கொடுக்காமல் இருந்தாலே மதுப்பழக்கத்தை மட்டுப்படுத்திவிட முடியும்.
-ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT