Published : 12 Mar 2016 10:29 AM
Last Updated : 12 Mar 2016 10:29 AM
இரா.கிறிஸ்துதாஸ்காந்தி எழுதிய, ‘தமிழகத்தில் பழங்குடியினர் நலன்?’ கட்டுரை அருமை. பழங்குடியினரை முதலில் மனிதராக நடத்த வேண்டும். அதற்கு அடித்தட்டு மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய அரசாங்கம் வர வேண்டும். பழங்குடியினர் என்றாலே எல்லாவிதமான சுரண்டலையும் அவர்கள் மீது ஏற்றலாம் என்று அதிகார வர்க்கத்தினர் நினைக்கிறார்கள். கொத்தடிமைகளாக நடத்துகிறார்கள். முதலில் பழங்குடியினருக்குச் சாதிச் சான்றிதழ் கொடுத்து, அரசாங்க உத்தியோகம் தர வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். காட்டு நாயக்கர், புதிரை வண்ணார் போன்று சாதிச் சான்றிதழ் இல்லாமல் அல்லாடும் மக்களுக்குத் துரிதமாக சாதிச் சான்று வழங்க வழி செய்ய வேண்டும்.
- ஸ்ரீமதிவாணன், அரூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT