Published : 08 Mar 2016 09:16 AM
Last Updated : 08 Mar 2016 09:16 AM
மத்திய அரசைக் கண்டித்து, நகை வியாபாரிகள் போராட்டம் நடத்தும் செய்தியைப் படித்தேன். வியாபாரிகளின் குற்றச்சாட்டுகளில் முழு உண்மையில்லை. 2 லட்சத் துக்கு மேல் நகை வாங்குபவரின் முழு விவரம் பான்கார்டு மூலம் மத்திய அரசின் கவனத்துக்குச் செல்லும், அதனால், வரி ஏய்ப்பின்றி பணம் அரசுக்குச் சென்றடையும். வாங்கும் மற்றும் விற்கும் நகைகளுக்குக் கூலி,சேதாரம் மற்றும் மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் என்று அனைத்தையும் வசூலித்துக்கொள்ளும்போது, நகை வியாபாரிகள் இந்த விஷயத்தில் அரசோடு ஒன்றிப்போவதே நல்லது.
அப்போதுதான் உண்மையான தங்க வர்த்தகம் கணக்குக்கு வரும். வரி ஏய்ப்பு செய்வோரை அடையாளம் காண முடியும். இது நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, கலால் வரியை வேண்டுமானால் குறைக்கலாம். போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, அரசின் மற்ற நல்ல நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதே நல்லது.
- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT