Published : 29 Mar 2016 10:57 AM
Last Updated : 29 Mar 2016 10:57 AM

விழிப்புணர்வு தேவை

உலக காசநோய் தினத்தன்று ‘காசநோயிலிருந்து மீள்வோம்!’ கட்டுரை வெளியிடப்பட்டது மிகவும் பொருத்தம். காசநோயைக் குணப்படுத்தத் தகுந்த சிகிச்சை நடைமுறையில் இருந்தாலும், காசநோய் மரணங்கள் இன்னமும் இருப்பதற்குக் காரணம் மக்களின் அறியாமைதான். காசநோய், தொற்றுநோய் என்பதால், வீடுகளிலிருந்து சிகிச்சை எடுப்பதைவிட மருத்துவமனையிலிருந்து சிகிச்சை எடுப்பது நோயாளிக்கு மட்டுமல்ல, அவரைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது. காசநோய் சிகிச்சை பெறுபவர்கள் சற்று குணமான மாதிரி தெரிந்தவுடன், மருந்துகளை எடுப்பதை நிறுத்திவிடுவது அவர்களுக்கே எமனாக அமைகிறது.

காசநோய்க்கான சிகிச்சை 3 மாதம் என்றால், பொறுமையாக அவர்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை மேற்கொண்டால் அவர்களுக்குத்தான் நல்லது. இதற்கான விழிப்புணர்வை அரசு அளிப்பதோடு, சரியான மருத்துவ சிகிச்சை எடுக்கவும் காசநோயாளிகளுக்கு உளவியல் ரீதியான சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x