Published : 24 Mar 2016 12:07 PM
Last Updated : 24 Mar 2016 12:07 PM
‘என்ன செய்ய வேண்டும் எனக் கான அரசு?’ பகுதியில், ஆட்சிக்கு வருவிருக்கின்ற அரசு, இயற்கை விவசாயத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளவற்றில் அவசியமானவற்றை இப்போதே கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.
அதோடு, இயற்கை உரம் விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினையாக உள்ளதால், அதைச் சரிசெய்யும் பொருட்டு, உள்ளாட்சி நிறுவனங்களால் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து, உள்ளாட்சிக்குச் சொந்தமான உரக்கிடங்குகளில் தனியாகச் சேகரித்து அவற்றை உரமாக மாற்றி, குறைந்த விலைக்கு விவசாயிகளுக்குக் கொடுக்கலாம். இதற்கெனத் தனியாக மெனக்கட வேண்டியதில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினாலே தமிழகத்துக்குத் தேவைப்படும் இயற்கை உரங்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தை உள்ளாட்சி நிறுவனங்களே தயாரித்து அளிக்க முடியும்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT