Published : 30 Mar 2016 10:41 AM
Last Updated : 30 Mar 2016 10:41 AM
உலக மசாலா பகுதியில் வெளியான ‘காற்றும் விற்பனைக்கு வந்துவிட்டது’ என்ற செய்தியைப் படித்தேன். சீனாவில் மலைப் பிரதேசத்தில் காற்று விற்பனை செய்யப்படுகிறது என்றால், தரைப் பிரதேசத்தில் எவ்வளவு தூரம் காற்று மாசுபட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. சீனாவைவிட காற்று மாசடைதலில் இந்தியா ஒன்றும் குறைந்ததல்ல.
எனில், இந்தியாவிலும் காற்று விற்பனைக்கு வரும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்பதை உணர முடிகிறது. இத்தகைய நிகழ்வை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. மரங்களை நட்டு மாசு அடைவதைத் தடுத்து சுத்தமான காற்றை வரும் சந்ததியினருக்கு அளிக்க இப்போதே உறுதிகொள்ள வேண்டும்.
ஜீவன். பி.கே., கும்பகோணம்.
வேண்டும் மதுவிலக்கு
மதுவின் கோரப்பிடியில் தமிழகம் எப்படியெல்லாம் சிக்கிச் சீரழிகிறது என்பதை மதுவால் பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்துக்களுடன் ‘என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?’ கட்டுரை படித்தேன். படித்தவுடன், என்னையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது. புதிதாகப் பதவியேற்கும் அரசாவது மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்.
- பி.நந்தகுமார், காங்கேயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT