Published : 16 Mar 2016 11:44 AM
Last Updated : 16 Mar 2016 11:44 AM
செவ்வாய் ஆன்று வெளியான ‘கொல்லும் அமைதி’ கட்டுரை வாசகர்களின் சிந்தனைக்குப் பல கருத்துக்களை முன்வைத்துள்ளது. குறிப்பாக, ‘இந்தியச் சமூக அமைப்பியலில் சாதிய விடுதலை அடையாமல், ஒட்டுமொத்தச் சமூக முன்னேற்றத்தை நம்மால் கனவிலும் கற்பனை செய்ய இயலாது’ என்ற சம்மட்டி வரிகள் அருமை. சமூக சிந்தனைப் புரட்சியாளர்கள் அம்பேத்கார்-பெரியார், ஜீவா ஆகியோரால் வழிமொழியப்பட்டதைத் தக்க இடத்தில் கட்டுரையாளர் கையாள்வது பாராட்டத் தக்கது. ஆணவக் கொலைகள் மீது திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் மவுனம் காக்கும் மர்மத்தை தோலுரித்துக்காட்டும் கட்டுரையாளர், இப்பிரச்சினையில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் கள்ள மவுனம் காக்கும் பிற கட்சிகளையும், அமைப்புகளையும் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.
- ந.நடராஜ சேகரன், பரமக்குடி.
ஒரு ஆக்கம் ஜாதி மதம் பாராமல் மனிதநேயம். இன்னொரு பக்கம் ஜாதியை முன்வைத்து படுகொலைகள். இந்த முரண்பாடுகளை எப்படிப் பார்ப்பது? நாம் எங்கே போகிறோம். ஆணவக் கொலை குறித்த கட்டுரையின் வரிகள் உணர்ச்சிகரமானவை. அதேநேரத்தில், இதன் பின்னணியில் இருக்கும் சமூகக் காரணிகளையும் ஆராய வேண்டும். காரணங்களை உணர்ச்சிவசப்படாது ஆராய்ந்தால்தான் தீர்வுகளை நோக்கி நகரமுடியும்.
- எஸ். கோகுலாச்சாரி, புவனகிரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT