Published : 04 Mar 2016 11:18 AM
Last Updated : 04 Mar 2016 11:18 AM
சமுதாயத்தின் அவலங்களைச் சீர்செய்வதில் பெரும்பங்கு ஆற்றிவரும் ‘தி இந்து’ நாளேட்டில், ‘என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?’ என்ற தலைப்பில், வெளியான திருநங்கைகளின் கோரிக்கைகளைப் படித்தேன். இது கண்டிப்பாக அனைத்துக் கட்சியினரின் கவனத்தையும் ஈர்க்கும். இனிவரும் அரசாவது, மனிதநேயத்துடன் பரிசீலித்து இவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். குடும்பம், சமுதாயம், அரசு ஆகிய மூன்று இனங்களும் மூன்றாம் பாலினத்துக்காக சகிப்புத் தன்மை, அக்கறை மற்றும் மனிதநேயத்துடன் செயல்பட்டால் அவர்களது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.
கு.மா.பா.கபிலன், சென்னை.
மானுடத்தின் வழிகாட்டி
‘வாழ்வு இனிது’ பகுதி அற்புதமானது, அவசியமானதும்கூட. வாழ்வியலைக் கற்றுத்தரும் நல்ல முயற்சி இது. தண்ணீர் சிக்கனம், நீச்சல், நடை பயில்தல், மிதிவண்டிப் பயணம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த வாரம் பொதுப்போக்குவரத்தின் பயன்பாட்டைப் பற்றிப் படங்களுடன் பாடம் சொல்லியிருக்கிறது ‘தி இந்து’. தனிமனித சேமிப்புக்கும் நாட்டின் சேமிப்புக்கும் இதுவே நல்லவழி. ‘வாழ்வு இனிது’ மானுடத்தின் வழிகாட்டி.
- கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி, தருமபுரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT