Published : 25 Feb 2016 10:45 AM
Last Updated : 25 Feb 2016 10:45 AM
தமிழகத்தில் தினசரி நடக்கும் இரண்டு சக்கர நான்கு சக்கர வாகன விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவது மனத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே இந்த விபத்துகள் நடக்கின்றன. அதுவும் இரவு 2 மணி முதல் காலை 6 மணிக்குள்தான் நடக்கின்றன. ஓட்டுநர் தூக்கம், முன்னால் செல்லும் வாகனங்களில் ஒளியைப் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் இல்லாமை போன்றவையே விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதேசம யம், தனக்கு மட்டுமல்லாமல் பிறருக் கும் ஆபத்து நேரும் என்பதைக் கொஞ்சம்கூட உணராமல் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குபவர்களும் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு வினாடியில் எல்லாமே மாறிவிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!
- பெ. குழந்தைவேலு,வேலூர்(நாமக்கல்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT