Published : 06 Feb 2016 12:54 PM
Last Updated : 06 Feb 2016 12:54 PM
‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ பற்றிய கே.என்.ராமசந்திரனின் ‘பாலகனும் சிறு பெண்ணும்’ கட்டுரையில், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவற்றின் தாக்கம் உலகில் இருந்ததையும், இதன் காரணமாக உலக அளவில் அரசியலிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டைப் பொறுத்தவரை இது சாதகமான சூழ்நிலை என்றாலும்கூட, முன்னேற்பாடு என்ற விஷயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் நாம் இருக்கிறோம். மழை குறைவாகப் பெய்தாலும், அதிகமாகப் பெய்தாலும் அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடாமல் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொள்கிறோம். இயற்கை ஒருபோதும் மனிதனை ஏமாற்றியதில்லை, மனிதன்தான் இயற்கையையும் தன்னையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.
- அ. அப்துல் ரஹீம், காரைக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT