Published : 18 Feb 2016 10:35 AM
Last Updated : 18 Feb 2016 10:35 AM
தன் குழந்தையைப் பறிகொடுத்த ஆம்பர் ஸ்கோராவின் துயரப் பதிவான, ‘மனிதாபிமானமற்ற மனித இனமா நாம்?’ கட்டுரையைப் படித்தேன். இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போய் சம்பாதித்தால் மட்டுமே ஓரளவேனும் குடும்பத்தைச் சமாளிக்க முடியும். இதனால், வேறு வழியே இல்லாமல்தான் தாய்மார்கள் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுச் செல்கிறார்கள். போதுமான முதலுதவி, பயிற்சி இல்லாத உதவியாளர்கள், காற்றோட்டமில்லாத அறைக்குள் நடத்தப்படும் குழந்தைக் காப்பகங்கள் முறையாகப் பதிவுசெய்வதுகூடக் கிடையாது. இதைப் போன்ற குழந்தைக் காப்பகங்களை நாடுவதற்குப் பதிலாக உறவுகளைத் தேடிச்சென்று பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்வதே நமக்குப் பாதுகாப்பானது!
- அ. அப்துல் ரஹீம், காரைக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT