Published : 20 Feb 2016 10:47 AM
Last Updated : 20 Feb 2016 10:47 AM

மனதைப் பிழிந்த கட்டுரை!

எந்தவொரு விஷயத்தையும் தாய்மொழியில் படிக்கும்போது அதனுடைய வீரியம் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டு ‘மனிதாபிமானமற்ற மனித இனமா நாம்?’ கட்டுரை. ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கையில் ஆம்பர் ஸ்கோரா எழுதியக் கட்டுரையை ஆங்கிலத்தில் படித்தபோது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால், அதையே தமிழில் படித்தபோது (மொழிபெயர்ப்பு: சாரி) மனதைப் பிழிந்தே விட்டது. இந்தியாவிலாகட்டும், அமெரிக்காவிலாகட்டும், வேலைக்குப் போகும் ஒவ்வொரு இளம் தாயும், இப்படித்தான் மனப் போராட்டத்தோடு அலுவலகத்துக்குப் போக வேண்டி இருக்கிறது.

என்னுடைய மகனை சிசேரியன் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவித்து, ஒன்றரை மாதத்தில் பணிக்குச் செல்லும் நிர்பந்தம் ஏற்பட்ட இக்கட்டான சூழலுக்கே இக்கட்டுரை என்னை அழைத்துப் போய்விட்டது. அப்போது ஏற்பட்ட ஹெர்னியாவால் இப்போதும் நான் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். நல்ல வேளை, நமது அரசாங்கம், பிரசவத்திற்குப் பிறகு ஆறரை மாத விடுப்பைப் பரிந்துரைத்து, அதே போல தனியார் துறையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இது முழுமையாக நிறைவேறினால் வேலைக்குப் போகும் இளம் தாய்மார்களுக்கு சற்றே மன ஆறுதலாக இருக்கும்.

- தவமணி இராமன், மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x