Published : 11 Feb 2016 07:20 AM Last Updated : 11 Feb 2016 07:20 AM
மருந்து விலை குறையுமா?
‘இந்தியாவில் புற்றுநோய்க்கு ஆண்டுக்கு 3.5 லட்சம் பேர் இறக்கின்றனர்’ என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. இது அரசின் புள்ளிவிவரம். உண்மையில், இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர், மரணமடைவோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டால் அவரது சிகிச்சைக்குக் குறைந்தது சுமார் 10 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஏழைகள் என்ன செய்வார்கள். இந்தப் பரிதாப நிலை தீர அரசு புற்றுநோய்க்கான மருந்துகளின் விலையைக் குறைக்க வேண்டும். அல்லது புற்று நோயாளிகளை மருத்துவமனைகள் தத்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்து, அதற்கான செலவை அரசு செலுத்திவிட வேண்டும். முக்கியமாக, புற்றுநோயை உண்டாக்கும் கலப்பட உணவுகளைத் தடை செய்ய வேண்டும். - கே.பி.எச்.முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
WRITE A COMMENT