Published : 02 Feb 2016 11:08 AM
Last Updated : 02 Feb 2016 11:08 AM

பொருளாதாரத்தை மேம்படுத்த வழி

பொருளாதாரத்தை ஊக்குவிக்க எதிர்மறை வட்டி முறையை நடைமுறைப்படுத்திய ஜப்பான் மத்திய வங்கியின் செயல்முறை உலக அளவில் பொருளாதாரச் சீர்திருத்தத்தில் ஓர் அதிர்வை உருவாக்கியுள்ளது. வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட் தொகைக்கு வட்டி தருவதற்குப் பதிலாக கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை பொதுமக்கள் மத்தியில் ஆதரவைப் பெறாவிடினும், பணவாட்டத்தைக் கட்டுப்படுத்த இது போன்ற முயற்சிகள் அவசியமாகின்றன.

பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியாவும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். தமது தேவைக்கு மேல் உபரியாக உள்ள தொகையினை வங்கிகளில் வைத்திருக்கும் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பது, கூடுதல் தொகை விதிப்பது போன்றவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்ற நிலையில் இதனை வரவேற்பதில் தவறில்லை.

- சு. தட்சிணாமூர்த்தி, கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x