Published : 04 Feb 2016 10:49 AM
Last Updated : 04 Feb 2016 10:49 AM
நாமக்கல்லில் அரசுப் பெண் ஊழியர் தற்கொலை முயற்சி என்ற செய்தியைப் படித்தேன். பொதுவாக, உத்தரவிட்ட காரியம் நடந்தால் சரி என்பதுதான் இப்போது உயர் அதிகாரிகளின் எண்ணமாக இருக்கிறது. அதனை யார் செய்தார்கள் என்று கேட்பதோ, சிறப்பாகச் செய்தவர்களை அழைத்துப் பாராட்டுவதோ கிடையாது. அவருக்கும் மேலே உள்ள உயரதிகாரிக்கும், அதற்கும் மேலிருக்கும் அமைச்சருக்கும் இதே மனப்பான்மைதான் இருக்கும்.
மேலேயிருந்து வரும் ஒரு உத்தரவு படிப்படியாகக் கீழே உள்ள பணியாளர்களிடம்தான் வரும். தற்போது நிறைய காலிப் பணியிடங்களை நிரப்பாத காரணத்தால், பெரும்பாலானோர் கூடுதல் பணிச்சுமைகளில்தான் உள்ளனர். உயரதிகாரிகளின் இந்த மனப்பான்மைதான் பல தற்கொலைகளுக்குக் காரணம். மனமாற்றம் தேவை.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT