Published : 02 Feb 2016 11:09 AM
Last Updated : 02 Feb 2016 11:09 AM
தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ராபின்மெயின் வங்கி மோசடி வழக்கில் 32 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மக்கள் மனதில் நம் நீதித் துறையின் செயல்பாடுகள் பற்றி பல சந்தேகங்ளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேர் வழக்கு நடைபெற்ற காலத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது உலகுக்குத் தெரியாது. குற்றவாளிகள் என்றால், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்.நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்ததோடு, தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் பதவி வகித்துவந்ததோடு இடையில் மரணமடைந்ததார். இப்போது தண்டனை பெற்றவர்களும் 32 ஆண்டுகள் சுதந்திரப் பறவைகளாகத்தான் சுற்றித் திரிந்திருக்கிறார்கள். இனியும் அவர்கள் தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்களா என்பது தெரியாது.
மேல் முறையீடு செய்து ஜாமீனில் வெளிவரலாம். நம் நீதித் துறையில் இப்படிப்பட்ட குறைகள் உடனடியாகக் களையப்பட வேண்டும். தீர்ப்புகள் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.
- கே.பி.எச்.முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT