Published : 12 Feb 2016 12:04 PM
Last Updated : 12 Feb 2016 12:04 PM
‘தலைவா... நீ தெய்வம்!’ என்ற கட்டுரை எங்களைப் போன்ற இளைஞர்களுக்குத் தேவையான மிகவும் முக்கியமான பதிவு. இந்தியாவில் வாழும்போதுதான் ஏற்றத்தாழ்வுகள் என்றால், இறந்த பிறகும்கூடத் தலைவர்களின் புகழைப் பரப்புவதில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அந்த இயக்கத்தைச் சார்ந்த முன்னாள் தலைவர்கள் மட்டுமே நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தது போன்ற கருத்து வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றது. நமது மாநிலத்திலும்கூட இதேநிலை நிலவுகிறது. நியாயமாகப் பார்த்தால், தமிழகத்தில் அண்ணாவை விட காமராஜர் தான் அதிக காலம் முதல்வராக இருந்து, மக்கள் சேவை செய்துள்ளார். ஆனால், தற்போது அரசு யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?!
- பா. தங்கராஜ், திப்பணம்பட்டி கிராமம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT