Published : 13 Feb 2016 10:54 AM
Last Updated : 13 Feb 2016 10:54 AM

‘மக்கள் நல’ கூட்டணியாகுமா?

‘மகுடம் சூடுமா மக்கள் நலக் கூட்டணி?’ என்ற கட்டுரையின் தலைப்புக்கான பதில், தேர்தல் முடிவுக்குப் பிறகே கிடைக்கும் என்றாலும், அது சாத்தியமா என்று யோசித்தால், சில கேள்விகளும் பதில்களும் தோன்றுகின்றன. இன்றைக்கு அதிமுக மற்றும் திமுக கட்சிகளை ஊழல் வழக்குகள் நிழலாகத் தொடர்கின்றன என்ற கூற்று சத்தியமான உண்மை. ஆனால், இந்த ஊழல் வழக்குகளுக் கான தவறுகள் நடைபெற்றபோது நால்வர் அணியின் நான்கு கட்சிக ளும் அவர்களுடன்தான் கூட்டணியில் இருந்தன. கொலை செய்தவனுக்குத் தண்டனை என்றால், அவனுக்கு உதவியவர்களுக்கும் தண்டனை என்பதுதான் நமது சட்டத்தில் உள்ள நியதி. இப்போது வெளியே வந்து நாங்கள் நல்லவர்கள் என்றால் மக்கள் எப்படி நம்புவார்கள்?

உண்மையில், மக்கள் நலனுக்கான கூட்டணிதான் ‘மக்கள் நலக் கூட்டணி’ என்றால், இப்போதே மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் எங்கள் கட்சி முதல்வர் பதவியைக் கோர மாட்டோம் என்று முதலிலேயே சொல்வார்களா? அல்லது நான்கு கட்சியும் சேர்ந்து பொதுவான ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாமே?

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x