Published : 11 Feb 2016 07:37 AM Last Updated : 11 Feb 2016 07:37 AM
பயக் கட்டுரை அருமை
பாரிஸில் நடந்த விழாவுக்குச் சென்று வந்த கவிஞர் சல்மாவின் பய(ண)க் கட்டுரை தற்போதைய பாரிஸின் நிலையை அப்படியே கண்முன் நிறுத்தியது. சல்மாவின் வார்த்தைகளிலேயே கூறினால், “இஸ்லாமியர்களை மனப்பூர்வமாக வரவேற்ற அந்த நாடு, இனி அப்படி இருக்கப்போவதில்லை என்பது பல காட்சிகள் மூலமும் நுட்பமான சில அறிகுறிகள் மூலமாகவும் தெரிந்தது” என்ற வரிகள், இனி, பாரிஸ் இப்படித்தான் இருக்கும் என்பதைப் புரிய வைத்தன.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுர விபத்துக்குப் பிறகு முஸ்லிம் என்ற வார்த்தையையே எப்படி வெறுத்தார்கள் என்பதை, அங்கு விமான நிலையத்தில், நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதல் நடிகர் ஷாரூக்கான் வரை எப்படி நடத்தினார்கள் என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். அமெரிக்காவின் நிலை இப்போது பிரான்ஸிலும் உள்ளது வருத்தத்துக்குரியது. வன்முறைகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதை எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகிறார்களோ?
WRITE A COMMENT