Published : 03 Feb 2016 10:35 AM
Last Updated : 03 Feb 2016 10:35 AM

தனியாரிடம் இருந்து விடுபடுமா?

‘வெளிப்படையாகட்டும் கல்வி நிர்வாகம்’ கட்டுரை காலத்துக்கேற்ற பதிவு. 1,000 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் உண்டு. இப்படிக் கணிசமாகப் பணம் கொடுத்துப் படித்துப் பட்டம் பெறுவது அனைவருக்கும் சாத்தியமன்று. சில தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் இதே நிலைதான்.

இது பல்கலைக்கழகத்துக்குத் தெரியும். அரசுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் வாய்மூடி மௌனம் சாதிக்கிறது. கல்லூரிகள் இயங்கும் விதம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கட்டண வரைமுறைகள் போன்றவற்றை ஓர் தெளிவான கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் எனக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது மிகச் சரி. ஆனால், இது எவ்வளவு தூரம் வெற்றிபெறும் என்பது சந்தேகமே! ஏனெனில், லஞ்சம், ஊழல் போன்றவை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றனவே!

- ப. சுகுமார், தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x