Published : 02 Feb 2016 11:08 AM
Last Updated : 02 Feb 2016 11:08 AM
‘உலக மசாலா’ பகுதியில் (31.01.16), இந்தோனேஷியாவின் லேயன் சுடாலன் என்ற வெல்டரின் ரோபோ கை பற்றிய கட்டுரை படித்தேன். ரோபோ கை இயந்திரத்தை உருவாக்கி, அந்த ரோபோ இயந்திரத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பதற்கு ஹெட் பேண்டையும் கண்டுபிடித்துள்ளார்.
மேலும், இவர் பணியாற்றிய நிறுவனத்திலேயே ரோபோ கையை வைத்துக்கொண்டு பணியில் சேர்ந்துள்ளதையெல்லாம் படிக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கை கால் இழந்தவர்களுக்கு அந்த உறுப்புகளை மீண்டும் பொருத்த டாக்டர்களே மிகவும் கஷ்டப்படும்போது, லேயன் சுடாலன் செய்துள்ள செயல், வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தால் எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டலாம் என்பதையே உணர்த்துகிறது!
- ஜீவன். பி.கே. கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT