Published : 08 Feb 2016 12:23 PM
Last Updated : 08 Feb 2016 12:23 PM
‘இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?’ கட்டுரை காலத்துக்கேற்ற அற்புதமான பதிவு. தர்கா மதநல்லிணக்கத்துக்கான தளம். வஹாபிகள் வளர்ந்தால் தர்காவை மட்டுமல்ல, சகோதர சமயக் கோயில்களையும் தகர்ப்பதன் மூலம் மதநல்லிணக்கத்தையும் சீர்குலைப்பார்கள் என்பது சரியான கருத்து. இந்த வஹாபிகளின் வளர்ச்சிக்குப் பிறகுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடல் உருவானது.
இவர்களின் வளர்ச்சிக்காக அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து பலிகடா ஆக்குகின்றார்கள். இவர்களின் அணுகுமுறையால் முஸ்லிம்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இந்துத்துவத்தைப் பெரும்பான்மை இந்துக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளவில்லையோ அதேபோல வஹாபியிஸத்தையும் பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஆறுதலான விஷயம். இந்த வஹாபிஸம் மனித இனத்துக்கு மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்துக்கும் எதிரிதான்
- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT