Published : 26 Feb 2016 11:09 AM
Last Updated : 26 Feb 2016 11:09 AM
‘என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?’ பகுதியில் திருநங்கைகள் தங்கள் வேதனையையும் ஆதங்கத்தையும் மட்டுமின்றி, அமையப்போகும் அரசு தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இதுபோன்ற விளிம்புநிலையினரின் கருத்துக்களைப் ‘தி இந்து’ மட்டுமே தொடர்ந்து பதிவுசெய்து வருகிறது. அவர்களைக் கேலி செய்தல், தவறாக சித்தரித்தல் போன்ற நிலையை மாற்றுவதோடு, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக் கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு எதிர்வரும் புதிய அரசு ஆவன செய்ய வேண்டும். விளிம்புநிலை மக்களின் குரலாக என்றும் ‘தி இந்து’ தொடர்ந்து செயல்பட வேண்டும்
- ரா. பொன்முத்தையா, தூத்துக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT