Published : 04 Feb 2016 10:51 AM
Last Updated : 04 Feb 2016 10:51 AM

வெளிப்படைத்தன்மை தேவை

தமிழகத்தின் கல்வித்தரம் பற்றிய அவல நிலையை ‘வெளிப்படையாகட்டும் கல்வி நிர்வாகம்’ என்ற கட்டுரை மூலம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் கட்டுரையாசிரியர். இதில் மிகவும் கவலைப்படக்கூடிய விஷயம் மருத்துவக் கல்லூரிகளில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதுதான். கல்லூரிகள் பணப் பயன்களுக்காகவே நடத்தப்படுவதால், மருத்துவக் கல்வியின் தரம் தாழ்ந்ததோடு நோயாளிகளின் உயிரோடு விளையாடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவத் துறையில் முன்னணியில் இருந்த தமிழகம் இப்போது தரம் தாழ்ந்த நிலையில் இருப்பது மிகவும் கவலைக்குரியது. கட்டுரையாளர் சொல்லும் ஆலோசனைப்படி கல்லூரிகளை நேர்மையான அதிகாரிகளைக்கொண்டு அவ்வப்போது தணிக்கை செய்தால் முறைகேடுகளை பெருமளவில் தவிர்க்கலாம்.

- கே.பி.எச்.முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x