Published : 18 Feb 2016 10:40 AM
Last Updated : 18 Feb 2016 10:40 AM

சிந்திக்க மட்டுமல்ல...

கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதி வரும் ‘முத்துக்குளிக்க வாரீகளா’ தொடரில், இன்றைய அரசியல் குறித்துக் கூறியுள்ள கருத்துகள் சிந்திக்க வைத்தன. போடுற ஓட்டை விட, போடாத ஓட்டுக்கு சக்தி அதிகம் என்பதை அழகாகக் கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்றாத அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஏமாறுவதைவிட, வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும் என வாக்காளர் கள் முடிவுசெய்தால், மக்களுக்குத் தரப்பட்ட வாக்குறுதிகள் நிறை வேற்றப்படும் என்ற கருத்து, கவிக்கோ அப்துல் ரகுமான் கண்டெடுத்த கருத்து முத்து. வெறும் அரசியல் வாதிகள் மட்டுமல்ல; பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மக்களும், லஞ்சத்துக்கு ஊக்கமளிக்கும் செயலைச் செய்பவர்களே என்று கூறியுள்ள கருத்து சிந்திக்க மட்டுமல்ல; செயலாக்கமும் தரப்பட வேண்டிய கருத்தாகும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x