Published : 01 Feb 2016 11:12 AM
Last Updated : 01 Feb 2016 11:12 AM
மெளனத்தை நுட்பமாக அலசியிருந்த பழ.அதியமானின் கட்டுரை சிறப்பான ஒன்று. நம் மரபில் பூதங்களை ஐந்தாக வகைப்படுத்தியிருக்கிறோம். அதில் உயர்நிலையில் இருக்கும் பூதம் ஆகாயம் (வெட்டவெளி). அதன் இயல்பு ஓசை. ஓசை எனச் சொன்னவுடன் நாம் சத்தத்தைத்தான் நினைவுக்குக் கொண்டுவருகிறோம். உண்மையில், ஆகாய ஓசை சத்தமன்று; அதனுள் செறிந்திருக்கும் மெளனத்தை நமக்கு விளங்கச் செய்வதற்கான ஏற்பாடு அது. ஆக, மேலோட்டமாய் ஓசையாய் தொனிக்கும் ஆகாயம், ஆழத்தில் மெளனத்தையே தன்னுள் கொண்டிருக்கிறது.
வேறுவிதமாகச் சொல்வதானால், இருப்பது மெளனம் மட்டும்தான். ஆறாவது அறிவான மனதின் இயல்பு இருமைத்தன்மை என்பதை நாமறிவோம். அதனால், ஒருமையையும் அது இருமையாக்கியே விளங்கிக் கொள்ள முயற்சிக்கும். அவ்வகையில், மெளனத்தை அதனால் சத்தத்தின் வழியாகவே கண்டுகொள்ளமுடியும்.
‘மெளனத்தை உற்று நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டென்னை மறந்திருந்தேன், இறந்தேவிட்டது இவ்வுடம்பே’ எனும் அருணகிரிநாதரின் அனுபவமும் காந்தியின் மோனவிரத அனுபவமும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கியவை.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT