Published : 04 Feb 2016 10:48 AM
Last Updated : 04 Feb 2016 10:48 AM
மக்களை ஏமாற்றுபவர்களாகச் சித்தரிக்கும் ‘கும்பகோணம் வேலை’ என்ற தகவலைப் படித்து வியந்தேன். நம் மக்களின் பேச்சுவழக்கில் அவர்களை அறியாமலேயே இது போன்ற புறம்பேசும் வழக்குகள் கலந்துவிடுகின்றன. ‘காந்தி கனணக்கு’ என்றொரு சொற்பிரயோகமும் நம்மிடையே வெகுபிரபலம். சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் தொண்டர்களின் மீது பரிவு கொண்ட சில உணவு விடுதி அதிபர்கள் அவர்கள் சாப்பிட்டதற்குக் காசு வாங்க மாட்டார்களாம்.
‘காந்தி கணக்கில்’ சேர்த்துவிட்டேன் என்பார்களாம். இன்றைக்கும் ஒரு பொருளின் பயன்பாட்டை அனுபவித்துவிட்டுக் காசு கொடுக்காமல் ஏமாற்றிச் செல்பவர்களை ‘காந்தி கணக்கில் எழுதிவிட்டுப் போய்விட்டான்’ என்று ஏளனமாகச் சொல்லும் நிலை இருக்கிறது.
- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT