Published : 03 Feb 2016 10:33 AM
Last Updated : 03 Feb 2016 10:33 AM
‘அகதிகளிடம் வழிப்பறி செய்யும் ஐரோப்பா’ தலையங்கம் படித்தேன். எதற்காக ஐ.நா. சபை தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்காக ஐ.நா. இப்போது செயல்படுகிறதா? பெரிய அறிவாளிகள் இருந்தும் போர் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லையே? அடுத்தவர்களின் கண்ணீரிலும் காசு பார்க்கிற வல்லரசு நாடுகளால் எப்படித் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்? உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து இந்தப் போரை நிறுத்தி சிரியா, லிபிய மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
தங்கள் உடமைகளைப் பறிகொடுத்துவிட்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைத் தன் நாட்டு மக்களைப் போல நடத்த வேண்டும் என்று பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் புரிய வைக்க வேண்டும். ஆனால், இதை எல்லாம் செய்ய வேண்டியது யார்? இப்போது மொத்த உலகமுமே மனிதாபிமானத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறது. யாரிடம் போய் முறையிட?
- வீ. ரத்னமாலா, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT