Published : 23 Feb 2016 10:02 AM
Last Updated : 23 Feb 2016 10:02 AM

அடுத்த தலைவர்?

ஸ்டாலினைப் பற்றிய கட்டுரை நடுநிலையுடன் எழுதப்பட்டிருக்கிறது. எனினும், அவரின் வளர்ச்சிக்கு அவரது திறமை மட்டுமே காரணமல்ல என்பதைத் திமுக ஆதரவாளர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற வாதம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சரியாக இருக்கலாம். அவரின் வளர்ச்சியைத் தொகுத்துப் பார்த்தால் அவரின் அரசியல் வாழ்வின் நகர்வுகள் அழகாகத் தொகுக்கப்பட்டிருப்பது புரியும்.

இன்றைய நிலையில் தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகளில் தற்போதைய தலைவருக்குப் பிறகு இவர்தான் தலைவர் என்று சொல்லக்கூடிய நிலையில் திமுக மட்டுமே இருக்கிறது. அதிமுக, மதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளில் இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருப்பவர்கள் யாரும் இல்லையென்பதே உண்மை.ஸ்டாலின் உள்துறை அமைச்சராக அல்ல உள்ளாட்சித் துறை அமைச்சராகத்தான் இருந்தார்.

-வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.



குடும்பச் சண்டை காரணமாகவே மக்களவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இந்தக் காரணத்தினால்தான் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, திமுக தலைவர் கருணாநிதி தயங்குகிறார். அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் எதிர்ப்பாளர்களை எளிதாக அடக்கி விடலாம் என்று இப்போதே அடக்கி வாசிக்கிறார். கருணாநிதியை முன்னிறுத்துவதைவிட ஸ்டாலினை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்தித்தால் திமுக கூடுதலாகப் பல இடங்களைப் பெறலாம் என்பது பலருக்கும் தெரியும்.

- அ. அப்துல் ரஹீம், காரைக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x