Published : 25 Feb 2016 10:46 AM
Last Updated : 25 Feb 2016 10:46 AM
எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த மொழியினராக இருந்தாலும், எந்த தேசத்தவராக இருந்தாலும் அனைவரும் சமத்துவத்தோடும் சகோதரத்துவ உறவோடும் தனிமனித உரிமைகளோடும் வாழ்வதற்கான நெறிமுறையே மக்களாட்சி அரசியலின் அடிப்படை அறம். ஆனால் மதம் என்பது ஒரு வாழ்க்கை முறையாக குடிமக்களிடம் திணிக்கப்படுமானால் மக்களாட்சிக்கான வாழ்க்கை முறையை நாம் என்றைக்கும் நிலைபெறச் செய்ய முடியாது. எனினும் அதுபோன்ற சூழல் உருவாகலாம் எனும் அச்சம் எழுந்திருக்கிறது.
மக்களிடையே பிளவையும் பகைமை உணர்வையும் உருவாக்க வழிவகுக்கும் ஆபத்தான மதவாதச் சிந்தாந்த ஆதிக்க வழிமுறைகளை ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக தலைவர்களும் பிற இந்துத்துவ சிந்தாந்தவாதிகளும் இந்துத்துவ மாணவர் அமைப்புகளும் கைவிடுவதே நாட்டுக்குச் செய்யும் கடமை.
- சு. மூர்த்தி, மக்களாட்சிக்கான கல்வி இயக்கம். திருப்பூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT