Published : 24 Dec 2015 11:18 AM
Last Updated : 24 Dec 2015 11:18 AM

எண்ணத்தின் பிரதிபலிப்பு

டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்தில் சி.பி.ஐ நடத்திய சோதனை பற்றி எழுதிய தலையங்கம், பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கவர்னர் மூலமாகவும் பிற வழிகளிலும் கேஜ்ரிவாலுக்கு பா.ஜ.க அரசு தொல்லை கொடுத்துவந்ததை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது முதல்வரின் அனுமதியைப் பெறாமல் அவருடைய அலுவலகத்தில் சி.பி.ஐ நுழைந்து சோதனையிட்டது உள்நோக்கம் கொண்ட அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என்றே சொல்லலாம். மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்துவரும் மோடி அரசின் இச்செயல், மேலும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

அதேசமயம், பிரதமர் மோடியைக் கோழை, மனநோயாளி என்று கேஜ்ரிவால் வசைபாடியதும் ஏற்பு டையது இல்லை.

எதிர்க் கட்சிகளை ஒடுக்க மோடி அரசு சி.பி.ஐயைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அருண்ஜேட்லி மீதான கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

- கே.பி.எச்.முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x