Published : 15 Dec 2015 08:33 AM
Last Updated : 15 Dec 2015 08:33 AM
வரலாறு காணாத மழை சென்னையைப் புரட்டிவிட்டது. தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்டாலும் மக்களை மீட்பதற்குப் பெரும்பங்கு வகித்தது சமூக வலைத்தளங்களே. வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் முகநூல், ட்விட்டரில் அபயக் குரல் எழுப்பியதைக் கண்டு பலரும் அதைத் தங்கள் வலைத்தளங்களில் பகிர, சமூக ஆர்வலர்கள் மீட்புப் பணிக்கும், உதவி செய்வதற்கும் எளிதாக இருந்தது.
வெறும் வம்புக்கும் வாக்குவாதத்துக்குமான இடம்தான் சமூக வலைத்தளங்கள் என்பதுபோய் இன்று பல உயிர்களையும் காப்பாற்ற அந்த ஊடகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெறுமனே வீணே பொழுதைப் போக்கிய வாட்ஸ் அப் மூலம் பல தன்னார்வலர்கள் மக்களின் தேவைகளை அறிந்து, பாதிப்பு இடத்திற்குச் சென்றனர். ஆக இம்முறை இளையத் தலைமுறை தன் சமூகப்பொறுப்பையும் சமூகவலைத்தளங்கள் மூலமாக நிரூபித்துள்ளது.
- எம். விக்னேஷ், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT