Published : 26 Dec 2015 11:13 AM
Last Updated : 26 Dec 2015 11:13 AM
பீப் பாடல் சர்ச்சை தீரப்போவதாகத் தெரியவில்லை. இளமை அறியாமையில் செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டுப் பிரச்சினைக்கு முடிவு கொண்டுவந்திருக்கலாம்.
மன்னிப்பு கேட்கத் தயக்கம் ஏன் என்பது புலப்படவில்லை. ஆழ்மனதில் உள்ளவை இவ்வாறு வெளிப்படும் என்பது ஃப்ராய்டின் விதி.
ஆக, அப்பாடலின் உள்ளடக்கம் சிம்புவின் மனதைப் பிரதிபலிக்கின்றதோ! இதைவிட மோசமான பாடல்களைச் சகித்துக்கொண்ட தமிழ் மக்கள், இப்பாடல் நாயகன் சிம்புவின் மீது பாய்வது ஏன்? நாங்கள் தமிழ்நாட்டை விட்டுச் சென்றுவிடுகிறோம் என்று சிம்புவின் தாயாரது புலம்பலும் வெளிவந்துள்ளது. தான் செய்தது தவறு என்றால், உயர் மனிதர்கள் மன்னிப்புக் கோரத் தயங்க மாட்டார்கள். ஆக, தன் தவறை ஒப்புக்கொண்டால் சிம்பு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதுதான் தீர்வாகும்.
இல்லை, தான் செய்தது சரிதான் என்றால், அதை வெளிப்படையாகக் கூறி நீதிமன்றத்தில் நீதி கேட்கலாமே, ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லையே!
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT